ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரகம் அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் போரானது வலுப்பெற்று வரும் நிலையில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா போரில் ஈடுபடுமா என்பது குறித்த ஊகங்கள் நிலவி வருகின்றது.
இப்போரில் அமெரிக்காவின் தலையீடு மற்றொரு பயங்கரமான விரிவாக்கத்திற்கும் எதிர்மறை விளைவுகளுக்கும் வழிவகுக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


