TamilsGuide

முன்னாள் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் சங்கம்- கனடா நடத்திய வருடாந்த ஒன்றுகூடல்

கனடாவில் கடந்த 20 வருடங்களாக இயங்கிவரும் முன்னாள் 'இலங்கை போக்குவரத்துச் சபை' ஊழியர்கள் சங்கம்  நடத்திய  2025  ஆண்டிற்குரிய வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 15-06-2025 ஞாயிற்றுக்கிழமையன்று  ஸ்காபுறோ நீல்சன் பூங்கா வளாகத்தில்  சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி வருடாந்த ஒன்றுகூடலை சிறப்பாக நடத்துவதற்கு சங்கத்தின் தலைவர் திரு. கௌரிநாதன், செயலாளர், எஸ். தவகுலதாசலிங்கம்.  உப  செயலாளர் வ.சுகுமார் உட்பட அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ஆதரவை வழங்கியிருந்தனர்.

மேற்படி வருடாந்த ஒன்றுகூடலுக்கு இலங்கையின் பிரபல தேசிய நாளிதழான 'வீரகேசரி' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ச. ஶ்ரீகஜன் அவர்கள்  ,  உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், "தமிழன் வழிகாட்டி " செந்தி , கல்விச் சபை உறுப்பினர் நீதன் சண்முகராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பெற்றிருந்தனர். "தமிழன் வழிகாட்டி " செந்தி அவர்களால்  தலைவர்  கௌரிநாதன்  அவர்கள்  பொன்னாடை போர்த்தி கௌரம் செய்யப்பட்டார். கனடிய மண்ணில் பல  ஆயிரக்கணக்கான  மாணவர்களிற்கு   கல்வி  கற்பித்தவர் கௌரிநாதன் என  கௌரம் செய்யப்பட்டார்.

தலைவர்  கௌரிநாதன்  அவர்கள் அங்கு உரையாற்றும் போது தங்கள் சங்கம் கனடாவிலும் தாயகத்திலும் ஆற்றிவரும் உதவிகள் தொடர்பாக அங்கு விபரங்களைத் தந்தார்.

அத்துடன் தங்கள் வருடாந்த ஒன்று கூடல் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில் தங்கள் உறுப்பினர்களை மகிழ்ச்சியோடும்  பெருமையோடும் பாராட்டி வரவேற்பதாகவும் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக ஒன்று கூடலை நடத்த  தீர்மானித்துள்ளதாவும் தெரிவித்தார்.

Leave a comment

Comment