TamilsGuide

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இன்று மாலை ஆரம்பிக்கப்படவிருந்த பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.

இன்று சபையை நடவடிக்கைகள் ஆரம்பமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், பேருவளை நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களில் 4 பேருக்கு குறித்த கடிதம் கிடைக்கவில்லை என்பதால், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அதன்படி, அந்தக் கடிதங்களை முறையாக வழங்கிய பிறகு, நகர சபை நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து பேருவளை நகரசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Comment