TamilsGuide

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா

கண்டியில் கொரிய கலாச்சார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற டேக்வாண்டோ பூம்சே சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், ஜே.எம். டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் அபார வெற்றி பெற்றுள்ளது.

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இப் போட்டியில் விழாவில், டேக்வாண்டோ ஏரோபிக்ஸ் பிரிவில் முதல் இடத்தையும் ஏனைய  பல பிரிவுகளிலும்  வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளது.

மொத்தம் ஐந்து விளையாட்டு கழகங்கள் போட்டியிட்ட இவ்விழாவில், அனைத்து கழகங்களையும் பின்னுக்குத் தள்ளி, ஜே.எம். டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் முதலிடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொத்த பதக்க எண்ணிக்கை:

    தங்கப் பதக்கம் – 56

    வெள்ளிப் பதக்கம் – 10

    வெண்கலப் பதக்கம் – 17

Leave a comment

Comment