TamilsGuide

கரோலஸ் பணியாளர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு

கிளிநொச்சி, முகமாலைப்பகுதியில் கரோலஸ் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியை ஆரம்பித்து 13வருடங்கள் நிறைவு தினமும் கரோலஸ் நிறுவனத்தில் 20வருடங்களுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் பணியாளர்களையும் கெளரவிக்கும் நிகழ்வும் கரோலஸ் முகமாலை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கரோலஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர்  Peter Hugh Scott Baker தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டார். குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ். முரளிதரன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் க.சிறீமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment