TamilsGuide

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக கிருஷ்ணன் கோவிந்தராசா தெரிவு

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசா ஏகமனதாக தெரிவாகியுள்ளார்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான  விசேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை  வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழு  ஆகிய 5 தரப்பும் தலா இரண்டு ஆசனங்களையும்,  தமிழ் அரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவின் போது, தமிழ் மக்கள் கூட்டணி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை குழு ஆகியவை கூட்டிணைந்து, சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசாவை முன் மொழிந்தனர்.

வேறு பெயர்கள் முன் மொழியப்படாததால் , கோவிந்தராசா தவிசாளராக ஏக மனதாக தெரிவானர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவில், ஆண்டிஐயா விஜயராசா தெரிவானர்.

அதேவேளை , சுயேச்சை குழு , தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை தமக்கு இடையில் தவிசாளர் பதவியை 16 மாதங்கள் வீதமாகப் பகிர்ந்து கொண்டே ஆதரவு வழங்க உடன்பாட்டுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment