TamilsGuide

இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் யாழிற்கு விஜயம்

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த  நிலையில் நேற்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார்.

யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அவர்களை சந்தித்த தூதுவர் , அவர்களின் குறைகளையும் நீதிக்கான போராட்டத்தையும் கேட்டறிந்தார். அத்துடன் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளை இங்கிலாந்து தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் எனவும்  உறுதியளித்தார்.

குறித்த சந்திப்பின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜாவை சந்தித்து, உயர்கல்வி, தொடர்பிலும் வடக்கு இளைஞர்களின் முன்னேற்றங்கள் குறித்தும் , அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது ” இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இங்கிலாந்து தொடர்ந்து முனைப்புடன் உள்ளதாக” அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment