எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர்களில் அவரது மெய்க்காவலரும் ஸ்டன்ட் நடிகருமான கே.பி.ராமகிருஷ்ணனும் ஒருவர். 1949-ம் ஆண்டு பி.யூ.சின்னப்பா நடித்த ‘மங்கையர்க்கரசி’ படத்தில் கே.பி.ராம கிருஷ்ணன் சண்டைக் காட்சியில் நடித் தார். சென்னை கீழ்ப்பாக்கம் நியூடோன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பின்போது, பி.யூ.சின்னப்பாவை சந்திக்க வந்த எம்.ஜி.ஆருக்கு ராமகிருஷ்ணன் அறி முகமானார். பின்னர், ‘நாடோடி மன்னன்’ படத்தில் அவருக்கு எம்.ஜி.ஆர். வாய்ப் பளித்தார். ஏறத்தாழ 30 ஆண்டுகள் எம்.ஜி.ஆருடன் கூடவே இருந்தவர்.
‘ஒரு தாய் மக்கள்’ படத்தின் படப் பிடிப்பு சென்னை வடபழனியில் சாரதா ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ராமகிருஷ்ணன் மோதும் காட்சி பட மாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அடித்ததும் ராமகிருஷ்ணன் அருகில் உள்ள குளத் தில் விழ வேண்டும். அப்படி, விழுந்த போது குளத்தில் தண்ணீர் குறைவாக இருந்ததால், அதில் ராமகிருஷ்ணன் குதித்தபோது கணுக்காலில் எலும்பு முறிந்துவிட்டது. எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘‘அண்ணே, கால் உடைஞ்சு போச்சு’’ என்று கத்தினார் ராமகிருஷ்ணன்.
படத்தின் தயாரிப்பாளர் எலும்பு முறி வுக்கு சிகிச்சை அளிக்க ராமகிருஷ் ணனை புத்தூருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். அதை எம்.ஜி.ஆர். ஏற்கவில்லை. ராமகிருஷ்ணனை தன் காரிலேயே பூந்தமல்லி நெடுஞ்சாலை யில் உள்ள கே.ஜே.மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். ராமகிருஷ்ணனுக்கு தைரியம் சொன்னதோடு, ஒருநாள் விட்டு ஒருநாள் அவரைப் பார்க்க வருவார். சிகிச்சைக்கான செலவை தயாரிப்பாளரை ஏற்கச் சொல்லா மல், ரூ.37 ஆயிரத்தை எம்.ஜி.ஆரே கொடுத்தார். அதோடு, ராமகிருஷ்ண னின் குடும்பச் செலவுக்காக ரூ.10 ஆயிரமும் கொடுத்தார்.
- தி இந்து


