TamilsGuide

யாழில் 50 பேருக்கு டெங்கு

யாழ்ப்பாணத்தில் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்த வருடத்தின் இது வரையிலான காலப்  பகுதியில் யாழ் . போதனா வைத்தியசாலையில் மாத்திரம்  50 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு   சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன்” டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவன்  ஊடாகவே டெங்கு காய்ச்சலில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள முடியும்  எனவும், நுளம்பு பரவும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அழிக்க வேண்டும் எனவும்” அவர்  மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment