TamilsGuide

இந்தோனேசியாவிற்கு வருகை தருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

இலங்கைக்கான இந்தோனேசியா உயர் தூதரகத்தின் தூதுவர் தேவீ கெஸ்டினா டெப்பிங் மற்றும் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் மு.ஏ. சமந்த வித்யாரத்தன பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்தரகீர்த்தி அமைச்சின் இணைப்புச் செயலாளர் சிவனேசன் ஆகியோர்களுக்கிடையிலான இலங்கையின் பெருந்தோட்ட விவசாய மற்றும் தெங்கு உற்பத்திகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் (17) அன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

இவ் கலந்துரையாடலின் போது” இலங்கையின் பெருந்தோட்ட விவசாயத் துறையில் காணப்படுகின்ற வளர்ச்சி விசேடமாக தெங்கு,நெல்,சோளம், உற்பத்திகளில் இரு நாடுகளுக்கு இடையிலான அனுபவங்கள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக தெங்கு உற்பத்தியில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தல், அதனோடு இணைந்த இதர உற்பத்திகளை விருத்தி செய்தல் தொடர்பாகவும் இரசாயன உரங்கள் மற்றும் சேதன பசளைகள் மூலம் எவ்வாறான பயன்களை பெற்றுக் கொள்வது, சோளம் மற்றும் நெல் உற்பத்திகளில் எவ்வாறு தன்னிறைவை அடைவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்காவை இந்தோனேசியாவிற்கான உத்தியோகபூர்வ

விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் தூதுவர் தேவீ கெஸ்டினா டொபிங் அழைப்பு விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment