ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியை அமெரிக்காவால் வீழ்த்த முடியும் (கொல்ல முடியும்) என்று அச்சுறுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் படைகளுக்கு எதிராகப் பதிலடி வருவதைத் தவிர்க்கவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறிய டிரம்ப், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
"காமேனி எளிதான இலக்கு, ஆனால் அவரை இப்போதைக்கு வீழ்த்தப் போவதில்லை" எனத் தெரிவித்தார்.
முன்னதாக ஜி7 மாநாட்டைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பிய டிரம்ப், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருக்கும் 95 லட்சம் மக்களை வெளியேறுமாறு பதிவிட்டிருந்தார்.
இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களால் ஈரான் கணிசமான சேதங்களைச் சந்தித்துள்ளதாகவும், அமெரிக்காவின் உதவியுடன் அதன் அணுசக்தி வசதிகளை இஸ்ரேல் நிரந்தரமாகத் தாக்கும் வல்லமை பெற்றுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்த மோதலுக்கு உண்மையான முடிவைக் காண விரும்புவதாகவும், போர் நிறுத்தத்தை விட சிறந்ததை தேடுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாகவும் அவர் கூறினார்.


