TamilsGuide

அனிருத் வெளியிடும் ஓஹோ எந்தன் பேபி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. படத்தின் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார்.

மேலும் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.

திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நட்சத்திரா பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. பாடலை இசையமைப்பாளர் அனிருத் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடுகிறார்.
 

Leave a comment

Comment