TamilsGuide

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த போலிச் செய்திகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு பொதுமக்களை வலியுறுத்துகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலிய தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று பல்வேறு தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதை அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும், முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
 

Leave a comment

Comment