TamilsGuide

ஏற்கனவே ஒல்லியா இருக்கும் தனுஷ இன்னும் ஒல்லியாக சொன்னேன் - சேகர் கம்முலா

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.

குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் பார்வைகளை கடந்தது.

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் நடிகர் தனுஷை குறித்து சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " தனுஷ் எப்பொழுது படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலும் அந்த படத்தின் கதாப்பாத்திரமாக மாறிவிடுவார்.நான் அவரை முதன் முதலில் சந்தித்த போது இப்படத்திற்காக அவரை இன்னும் ஒல்லியாக சொன்னேன். அவர் அதற்கு " நீங்கள் மட்டும் தான் என்னை ஒல்லியாக கூறுகிறீர்கள்" என நகைச்சுவையாக கூறினார். மேலும் இப்படத்திற்காக அவர் டயட் இருந்து இன்னும் மெலிதான தோற்றத்தில் காணப்பட்டார்." என கூறினார்.

படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
 

Leave a comment

Comment