மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையே அதிகரித்து வரும் மோதல் நிலைமையால் அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பதிவில் , "நான் கையெழுத்திடச் சொன்ன 'ஒப்பந்தத்தில்' ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
என்ன ஒரு அவமானம், மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது.
நான் அதை மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டேன். அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும்" என்று அதில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.


