தெலுங்கில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த Hi நானா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
மேலும் அட்லீ - அல்லு அர்ஜுன் திரைப்படத்திலும் மிருணாள் தாகூர் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டும் உண்மை என்றால், இதுவே மிருணாள் தாகூரின் முதல் தமிழ் திரைப்படமாகும்.
இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் மிருணாள் தாகூரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் துளி கூட மேக்கப் போடாமல் உள்ளார் மிருணாள் தாகூர். இதோ அந்த புகைப்படம்..


