ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஈரான் நேற்று தூக்கிலிட்டது.
இஸ்மாயில் ஃபெக்ரி என்ற அந்த நபர், ஈரானிய பாதுகாப்பு முகமைகளால் டிசம்பர் 2023 இல் கைது செய்யப்பட்டார். ஈரானின் உச்ச நீதிமன்றத்தால் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இம்மாதிரியான உளவு வழக்குகளின் விவரங்கள் பொதுவாக வெளியிடப்படுவதில்லை. எனினும், ஃபெக்ரி பணத்திற்காக ஈரானின் ரகசிய தகவல்களை மொசாட்டிற்கு அனுப்ப முயன்றதாக ஈரானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, மே மாத இறுதியில், பெத்ராம் மதானி என்ற மற்றொருவரையும் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக ஈரான் தூக்கிலிட்டது.
இந்த நிகழ்வுகள், ஈரான் மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளுக்கு இடையேயான தீவிரமான மற்றும் இரகசிய மோதல்களை எடுத்துக்காட்டுகின்றன.


