TamilsGuide

6,060 உக்ரேனிய வீரர்களின் சடலங்களை திருப்பி ஒப்படைத்த ரஷியா

போரில் உயிரிழந்த 6,060உக்ரைனிய வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளதாக ரஷிய அதிபர் புதினின் உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த உடல்கள் ஒப்படைக்கப்பட்டதற்கு ஈடாக, ரஷியாவுக்கு, உக்ரைன் தரப்பிலிருந்து 78 ரஷிய வீரர்களின் உடல்கள் கிடைத்துள்ளதாக மெடின்ஸ்கி கூறினார்.

போர் கைதிகள் பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கடுமையான காயமடைந்த வீரர்களைப் பரிமாறிக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருவதாகவும், மெடின்ஸ்கி தனது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 13 அன்று, உக்ரைன் ஏற்கனவே 1,200 உயிரிழந்த வீரர்களின் உடல்களை ரஷியாவுடனான மற்றொரு பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திரும்பப் பெற்றது.

இந்த மாத தொடக்கத்தில் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற ரஷியா-உக்ரைன் பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட முடிவின் படி உடல்கள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment