பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், சமீபத்தில் பாகிஸ்தான் சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாகி வருகின்றன.
"பாகிஸ்தானின் சைபர் வீரர்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஐபிஎல் போட்டிகளின்போது மின்விளக்குகளை ஹேக் செய்து அணைத்ததுடன், இந்திய அணைக் கதவுகளையும் ஹேக் செய்து தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்" என்று அவர் கூறினார்.
இக்கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், நெட்டிசன்கள் அமைச்சரின் பேச்சு குறித்து கிண்டல் செய்து வருகின்றனர்.
"மின்சாரத்தால் இயங்கும் விளக்குகளை எப்படி ஹேக் செய்வது?", "அறிவியல் புரிதல் இல்லாமல் பேசுகிறாரா?" போன்ற கேள்விகளுடன் பலரும் அமைச்சரை விமர்சித்துள்ளனர்.


