TamilsGuide

கெட்டப்பை மாற்றிய சிம்பு... வெற்றிமாறனின் STR 49 ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் லீக்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இவருடன் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது.

இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டெஸ்ட் ஷூட் இன்று படக்குழு செய்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சிம்பு சட்டை மற்றும் லுங்கியுடன் காணப்படுகிறார். இயக்குநர் நெல்சனும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெல்சன் மற்றும் நடிகர் கவின் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருக்கின்றனர்.ஆண்டிரியா மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் வாடிவாசல் மற்றும் வட சென்னை 2 ஆகிய திரைப்படங்களை இயக்க வுள்ளார். இந்த கூட்டணியில் எம்மாதிரியான திரைப்படம் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
 

Leave a comment

Comment