TamilsGuide

10 மில்லியன் பார்வைகளை கடந்த குபேரா பட டிரெய்லர்

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.

குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. இதில் நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குபேரா டிரைலரை வெளியிட்டார். படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
 

Leave a comment

Comment