எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. விஜய் நடிக்க வேண்டிய காட்சி பகுதிகளின் படப்பிடிப்பு பணிகள் கடந்த வாரம் முடிவடைந்தது. இந்நிலையில் இன்றுடன் பூஜா ஹெக்டே நடிக்க வேண்டிய பகுதிகள் முடிவடைந்துள்ளதாக பூஜா ஹெக்டே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


