TamilsGuide

தம்புள்ளை பிரதேச சபையின் 6 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநீக்கம்

தம்புள்ளை பிரதேச சபையின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தம்புள்ளை பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் முடிவுக்கு இணங்க செயல்படத் தவறியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹேரத் முதியன்சலே சுசில் ஹேரத், அனில் இந்ரஜித் தசநாயக்க, தனஞ்சய சம்பத் கரதகொல்ல, அலுத் கெதர பிரியரஞ்சன குமார ரத்நாயக்க, ஹேரத் முதியன்சேலாகே குசுமா குமாரி மற்றும் கிரிஷாந்தி தில்ருக்ஷி பிரேமரத்ன ஆகியோரின் கட்சி உறுப்பினர் பதவி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment