TamilsGuide

விஜய் தேவரகொண்டா குறித்த கேள்வியால் வெட்கத்தில் முகம் சிவந்த ராஷ்மிகா மந்தனா

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.

குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குபேரா டிரைலரை வெளியிட்டார்.

குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் விஜய் தேவரகொண்டா குறித்து கேட்கப்பட்ட கேள்வியால் நடிகை ராஷ்மிகா மந்தனா வெட்கத்தில் முகம் சிவந்தார்.

நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் நாகர்ஜூனாவிடம் இருந்து எந்த விஷயங்களை எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று ராஷ்மிகாவிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு நாகர்ஜூனாவின் வசீகரத்தையும் தனுஷின் நடிப்பு, இயக்கம், நடனத்தையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, விஜய் தேவரகொண்டாவிடம் என்று கேள்வி எழுப்பியதற்கு வெட்கத்தில் முகம் சிவந்தபடி அனைத்தயும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று ராஷ்மிகா தெரிவித்தார்.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து மற்றும் ஒன்றாக டேட் செய்து வருகின்றனர் என்ற தகவல் டியர் காமரேட் திரைப்பட நாட்களில் இருந்தே பரவி வருகின்றன. அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பொது இடங்களுக்கு செல்வது, சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்தது இதனை உறுதிப்படுத்துவதாக இருந்தது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இருவர் தரப்பினரிடம் இருந்து விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment