TamilsGuide

ஈரான் தாக்குதல் எதிரொலி - இஸ்ரேல் பிரதமர் மகனின் திருமணம் ஒத்திவைப்பு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது

இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகனின் திருமணம் ஈரான் தாக்குதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகு, இன்று தனது காதலி அமித் யார்தேனியை திருமணம் செய்து கொள்ளவிருந்தார்.

இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னமும் காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நெதன்யாகு குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என்று இஸ்ரேலில் எதிர்ப்பு எழுந்த நிலையில், திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 

Leave a comment

Comment