TamilsGuide

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில விகாரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள்  துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று (15) அதிகாலை இத்  துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாகப்  பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் வீட்டின் நுழைவாயிலிலும் வீட்டை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

இத் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில், பண கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் கல்கிஸ்ஸை குற்றத் தடுப்பு பணியகம் மற்றும் கொஹுவல பொலிஸார்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment