TamilsGuide

தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் தயா கமகேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்கள் பகிரங்கமாக ஏலத்தில் விற்பதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஜூலை மாதம் 2ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இந்த ஏலம் நடைபெறும் என கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் பதிவாளரான பிரதி நிதி அதிகாரி தெரிவித்துள்ளார்.

தனியார் நிதி நிறுவனம் ஒன்றுக்கு செலுத்தப்பட வேண்டிய 104,229,342 ரூபாய் தொகையை வசூலிக்கும் நோக்கில் இந்த மூன்று நிறுவனங்களும் பகிரங்கமாக ஏலத்தில் விற்கப்படவுள்ளன.

தனியார் நிதி நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய 108,309,342 ரூபாயில், 4,080,000 ரூபாய் தொகை பிரதிவாதிகளால் செலுத்தப்பட்டுள்ளதால், மீதமுள்ள தொகையை வசூலிக்கும் நோக்கில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இவை ஏலத்தில் விற்கப்படவுள்ளன.

தயா குழுமம் லிமிடெட், தயா அப்பரல் எக்ஸ்போர்ட்டர் (பிரைவேட்) லிமிடெட், ஒலிம்பஸ் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இவ்வாறு ஏலத்தில் விற்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment