TamilsGuide

ஒரே ஆண்டில் இருமுறை அதிர்ஸ்டம் கிட்டிய நபர்

கனடாவின் லெத்பிரிட்ஜ் நகரத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹில் என்பவர், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ஸ்கிராட்ச் அண்ட் வின் லொத்தர் சீட்டில் பெரிய தொகையை வென்று மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அவர் கடந்த பெப்ரவரி மாதம் 10 டொலர் மதிப்புள்ள ஸ்கிராட்ச் டிக்கெட்டில் 200,000 டொலர் வென்றிருந்தார்.

தற்போது, போகர் லாட்டோ (Poker Lotto) ஸ்கிராட்ச் டிக்கெட்டில் 100,000 டொலர்கள் மீண்டும் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

முதலில் திரையில் என்ன வந்தது என்பதை நம்ப முடியவில்லை. மூன்று முறை ஸ்கேன் செய்தேன், பின்னர் கடைக்காரரையும் ஒருமுறை ஸ்கேன் செய்ய வைத்தேன்,” என ஹில் தனது வெற்றியைப் பற்றி கூறியுள்ளார்.

முந்தைய வெற்றியின் போது, புதிய வாகனம் வாங்கி மீதமுள்ள தொகையை சேமிப்பதாக திட்டமிட்டிருந்த ஹில், இந்த முறை பெற்ற தொகையை வங்கியில் வைப்பு செய்து “சற்று ஓய்வெடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற போகர் லாட்டோ டிக்கெட்டை, அவர் லெத்பிரிட்ஜில் ஹைலண்ட்ஸ் வீதியில் உள்ள சர்கிள் கே கடையில் கொள்வனவு செய்துள்ளார். 
 

Leave a comment

Comment