TamilsGuide

கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி

தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஊர்வசி. இதுவரை 700 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரது நடிப்பில் வெளியான ஜே பேபி, உல்ழொலுக்கு, ஹெர் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

ஊர்வசி மற்றும் மனோஜ் கே ஜெயன் தம்பதிக்கு பிறந்தவர் தேஜலக்ஷ்மி. ஆனால் மனோஜுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணத்தினால் கடந்த 2008 ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர். இவர்களுக்கு பிறந்த மகளான தேஜ லக்ஷ்மி தந்தியான மனோஜ் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.

தற்பொழுது தேஜலட்சுமி மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்திற்கு `சுந்தரியாயவல் ஸ்டெல்லா' என்ற தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை ஐகே கே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க. அறிமுக இயக்குநரான பினு பீட்டர் இயக்குகிறார். படத்தின் நாயகனாக சர்ஜனோ காலித் நடிகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவை அனீஷ் மேற்கொள்ள இசையை ஸ்ரீனாத் சிவசங்கரன் இசையமைக்கிறார். படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment