TamilsGuide

அகமதாபாத் விமான விபத்து- ஜனாதிபதி இரங்கல்

இந்திய விமான விபத்து குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வருத்தமும், தனது இரங்கலையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்றிரவு எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது,

இன்று (நேற்று) அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானமை தொடர்பில் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.

விமானத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த துயரத்தால் உயிர்களையும் எதிர்காலத்தையும் இழந்த இளம் மருத்துவ மாணவர்கள் உட்பட, தரையில் உயிரிழந்த பொதுமக்களின் துயரங்களும் அதே அளவு வேதனையளிக்கின்றன.

இந்த ஆழ்ந்த துக்கத்தின் தருணத்தில், இலங்கை மக்கள் இந்தியாவுடன் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன – என்று பதிவிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment