38 வருடங்கள் கழிந்து நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னமும் கமலும் இணைந்து படத்தை உருவாக்கியதும் முக்கியக் காரணம் எனலாம்.இப்படியொரு படத்தை கொடுக்கவா இவர்கள் மீண்டும் இணைந்தார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.
படத்தின் மொத்தக் காட்சியில் ஒரே ஒரு காட்சி கூட மனதில் ஒட்டவில்லை என்பதுதான் துயரம்.
சில படங்கள் வணிகரீதியாக வெற்றி பெறவில்லையென்றாலும் தரமான படங்கள் என்கிற வரிசையில் இன்னமும் சில படங்கள் பேசப்படுகின்றன.கமலுடைய படங்களையே எடுத்துக் கொண்டாலும்'''''குணா' 'அன்பே சிவம்'-போன்ற படங்களை சொல்லலாம்.
'Thug life'திரைப்படமோ எதிலுமே சேராத படு மோசமான திரைப்படம் என்றுதான் சொல்லணும்.
கமல்,சிம்பு,த்ரிஷா,அபிராமி,நாசர், ஜோஜீ ஜார்ஜ் போன்ற நடிப்பாற்றல் மிக்க நடிகர்கள் நடித்தும்,இசையமைப்பாளர் A.R.ரகுமான்,ஒளிப்பதிவு இயக்குநர் ரவி கே.சந்திரன் போன்ற திறமைசாலிகள் இணைந்தும் படத்தை காப்பாற்ற முடியவில்லை.
இந்த நேரத்தில் , உலகசினிமாவின் தந்தை என போற்றப்படம் இயக்குநர் அகிரா குரோசவா சொன்னதும் நினைவுக்கு வருது.
'ஒரு நல்ல திரைக்கதையை வைத்துக் கொண்டு ஒரு நல்ல இயக்குநர் சிறந்த படத்தை எடுக்க முடியும்.அதே திரைக்கதையை வைத்துக் கொண்டு ஒரு சாதாரண இயக்குநர் சுமாரான படத்தை எடுக்க முடியும்.ஆனால்,மோசமான திரைக்கதையை வைத்துக் கொண்டு மிகச்சிறந்த இயக்குனராலும் ஒரு நல்ல படத்தை உருவாக்கவே முடியாது."
அவர் சொன்னது இந்த 'Thug life 'படத்திற்கு அப்படியே பொருந்திப் போகிறது.
இந்தப் படத்தின் கதையை பலரும் அறிந்திருப்பார்கள்.அதனால்,படடத்தின் கதையை விவரிக்காமல் இத்திரைப்படத்தின் குழப்பான கதாபாத்திரங்களை மட்டும் ஒரு சில வரிகளில் சொல்லி முடிக்கிறேன்.
குழப்பமான கதாபாத்திரங்களின் வரிசையில், No 1:ரங்கராய சக்திவேல்:
சக்திவேலுக்கு(கமல்ஹாசன்)பொண்டாட்டின்னு ஒருத்தியிருந்தாலும் காமத்தில் மூழ்கி திளைக்க ஒரு பெண்.அவள்தான் இந்திராணி(த்ரிஷா).
காணாமல் போன அமரனின்(சிம்பு)தங்கை சந்திராவை தேடப் போய் Night club ஒன்றில் ஆடிக்கொண்டிருக்கும் இவளை அழைத்து வருகிறார்.தனது பாதுகாப்பிலேயே வசதிவாய்ப்புகளோடு வைத்துக் கொள்கிறார்.அப்பப்ப தனது மோகத்தையும் தீர்த்துக் கொள்கிறார்.
கொலை செய்து விட்டு சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் வீட்டிற்கு செல்லாமல் இந்திராணி வீட்டிலேயே மூன்று நாட்கள் திகட்ட திகட்ட சல்லாபித்த விட்டுத்தான் தாலி கட்டிய மனைவி ஜீவாவைத்தேடி ப் போகிறார்.அந்த அளவிற்கு சக்திவேலுக்கு இந்திராணியின் மீது மோகம் அதிகம்.
அதனால்,இந்த சக்திவேல் மனைவி ஜீவாவை கொஞ்சும் போது நம்மால் ரசிக்க முடியலே.இவர்களின் உலகம் இப்படித்தான் இருக்கும் என்றாலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியலே.அவருடைய மனைவியாலயே ஏற்றுக்கொள்ள முடியாதபோது நம்மால் எப்படி.????
அதுவும் ஜீவா சக்திவேலனையே மறந்த நிலையில் இருக்கும் போது இவர் உருகி உருகி அவளைத் தேடிப் போகும் போதும் நம்மால் உருக முடியலே.
No 2:ஜீவா.சக்திவேலின் மனைவி.தனது கணவன் இந்திராணி மடியிலேயே கெடக்கறான் என்கிற கோபத்தில் தாலியை தூக்கி அவ்வப்போது தூக்கியெறிந்து விடுவாள்.பின்னொரு நாள் தூக்கி எறிந்த தாலியை மாட்டிக்கொள்வாள்.சக்திவேல் அதைப் பற்றி கேட்டால்"இப்போ இங்கே வருவால்லே ...தாலி கட்டிய மனைவி நான்தான்னு அவளுக்கு காட்டத்தான் "என்பாள்.இப்படியொரு ரோஷக்கார பொம்பள.
No3:அமரன்(சிம்பு):இந்திராணி சக்திவேலுவின் வப்பாட்டின்னு தெரிஞ்சும் "என் கூட வா....என் கூட வா..."ன்னு இந்திராணியை நச்சரிச்சு கெஞ்சுவது சகிக்கலே.வளர்த்த அப்பன் வச்சிருந்த பொண்ணுன்னு தெரிஞ்ச பிறகும்.இவனே சக்திவேலை இந்திராணியின் வீட்டுல கொண்டு போய் விட்டவன்தானே.
" சந்திராவை கூட்டிட்டு வர்றேன்னு போயி,இந்திராணி ஒன்னையை கூட்டுட்டு வந்துட்டாரு...சந்திராதான் கெடக்கலே...நீயாவது வா..."என்று அழைக்கும் போது காண சகிக்கலே.
அமரனுடைய காணாமல் போன தங்கைதான் சந்திரா என்பதுதான் கொடுமை.
No 4:மாணிக்கம்(நாசர்)இதுக்கு இவன் சரிப்பட்டு வரமாட்டான்னுட்டு நினைச்சு தம்பி சக்திவேல் அண்ணன்கிட்டே(நாசர்) பொறுப்பை ஒப்படைக்காம அமரன்கிட்டே(சிம்பு)ஒப்படைச்சதனால தம்பி மேலே கோபம்.அந்த கோபத்தையும் தெளிவா சொல்லலே.அமரன் மேலே ஏன் இவருக்கு கோவம் வரலே.தம்பியை கொல்லணும்னு துடிச்சவரு,மொதல்ல அமரனத்தானே கொல்லணும்.
No5:படத்தின் உச்சபட்ச குழப்பமான கதாபாத்திரம் என்றால் இந்த இந்திராணி கதாபாத்திரம்தான்.
கதாபாத்திரத்திற்காக த்ரிஷாவை தேர்ந்தெடுக்காமல் த்ரிஷாவுக்காக கதாபாத்திரத்தை உருவாக்கினால் இந்திராணி இப்படி தான் தோன்றித்தனமாத்தான் திரிவாள்.
சக்திவேலுவிடமும் நெருங்கிப் பழகுறா.அமரன் கூப்பிட்டாலும் முரண்டு புடிக்காமல் Hutch dog மாதிரி பின்னாடியே போறா.என்ன எழவெடுத்த கதாபாத்திரமிது என்றுதான் கேட்கத் தோணுது.
No:6-அமரனின் தங்கை சந்திரா:கேங்ஸ்டர்களுக்கிடையில் நடக்கும் சண்டையில் காணாமல் போன சந்திரா போலீஸ் அதிகாரியின் வீட்டிலேயே வளர்ப்பு மகளாக வளர்க்கிறாள்.தனது மகனான காவல்துறை அதிகாரிக்கே திருமணமும் செய்து வைக்கிறார்.
ஏன் இவர்கள் விவாகரத்து செய்ய நினைக்கிறார்கள் பின் சேர்கிறார்கள் என்பதையெல்லாம் இயக்குநர் மணிரத்னம் அவர்கள் சொன்னால்தான் நமக்கெல்லாம் தெரியும்.
Iratta படத்தில் ஜோஜூஜார்ஜின் நடிப்பு மிகப்பிரமாதமாயிருக்கும்.அவரையும் இந்தப் படத்தில் சேர்த்து வீணடித்து விட்டார்கள்.
Flash back காட்சியிலிருந்து படம் ஆரம்பித்த முதல் 15 நிமிடங்கள் சிறப்பாகத்தான் இருந்தது.அதுவும்,1994 காலகட்டம் Black&White-ல் வரும் Gunshoot காட்சிகள் சிறப்புதான்.
கேங்ஸ்டர் கதைன்னு ஆரம்பிச்சு அதை நோக்கியே பயணிக்காமல் எங்கெங்கோ சென்று முட்டுச்சந்துல நின்னதுதான் மிச்சம்.
கடைசியா ஒரு வழியா வயலில் கதிர் அறுத்தபடியே தன்னுடைய 'Thug Life'கதையை சொல்லி முடித்து திரும்பி போகும் போது'விண்வெளி நாயகா'என்று உச்சக்குரலில் ஸ்ருதிஹாசன் பாட ஆரம்பித்தவுடன் நாமளும் களைப்புடன் எழுந்திருக்கிறோம்.
விவசாயியான சக்திவேலுவுக்கும் விண்வெளிநாயகனுக்கும் என்ன சம்மந்தம் என்கிற குழப்பத்துடனேயே தியேட்டரை விட்டும் வெளியேறுகிறோம்.????????
நன்றி,வணக்கம்.
சே மணிசேகரன்.


