TamilsGuide

வடக்கில் வீட்டு திட்டத்திற்கு முதல்கட்ட கொடுப்பனவு வழங்கிவைப்பு

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் (PSDG) முன்னெடுக்கப்படும் தலா 18 லட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான முதல்கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் (11) நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆளுநரிடம், வீடுகள் தேவை என முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சுக்கு பாரப்படுத்தப்பட்டு உள்ளூராட்சி அமைச்சால் குழு நியமிக்கப்பட்டு பிரதேச செயலர்களின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு கோரிக்கையும் ஆராயப்பட்டு 14 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 பேரும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு தலா 2 பேரும், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தலா 3 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான முதல் கட்டக் கொடுப்பனவான 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா காசோலையாக பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
 

Leave a comment

Comment