TamilsGuide

மனைவியை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது

சிலாபம் – அம்பகந்தவில பகுதியில் மனைவியை, கணவன் தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மனைவிக்கு தகாத உறவு இருப்பதாகச் சந்தேகித்து இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த கணவர் அவரது மனைவியை தீ வைத்து எரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனைவி சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 39 வயதுடைய உயிரிழந்த பெண் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கணவர் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment