TamilsGuide

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையை கைவிட மாட்டோம் - டொனால்ட் ட்ரம்ப் 

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லிங்க் சேவையை வெள்ளை மாளிகை கைவிடாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஸ்டார்லிங்க் நல்ல சேவை வழங்குவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் பேசிய அவர், எலான் மஸ்கிடம் வாங்கிய டெஸ்லா காரை, வெள்ளை மாளிகையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றவுள்ளதாகவும் கூறினார்.

தங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருந்தது, அவருக்கு நல்வாழ்த்துக்கள் மட்டுமே கூற விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment