TamilsGuide

தனுஷ்-ன் குபேரா- வரும் 13ம் தேதி டிரெய்லர் வெளியீடு

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 3 மணி நேரம் 15 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குபேரா படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, குபேரா திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment