TamilsGuide

யாழில் இளைஞர் மீது, வன்முறைக் கும்பல் வாள் வெட்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் ஏழாலை பகுதியை சேர்ந்த  இளைஞனர் ஒருவர் மீது  இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட வன்முறைக் கும்பலொன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டுத்  தப்பிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார்,வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

ஏனைய மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ள பொலிஸார்  குறித்த தாக்குதல் முன் பகை காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment