TamilsGuide

மட்டக்களப்பு மாநகரசபையின் 8 ஆவது முதல்வராக சிவம்பாக்கியநாதன் தெரிவு

மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம்பாக்கியநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு முதல்வர் மற்றும் பிரதி முதல்வதை தெரிவுசெய்யும் வகையிலான அமர்வு இன்று காலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம்பாக்கியநாதனும்,  பிரதி முதல்வராக தமிழரசுக்கட்சியை சேர்ந்த வை. தினேஸ்குமார் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இன்றைய அமர்வினை பார்வையாளர்கள் அரங்கில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிஸ்தர்களும் வருகை தந்திருந்தனர்.

சபை அமர்வினைத்  தொடர்ந்து முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் தமது கடமைகளை பொறுப்பேற்றதுடன் அவர்களுக்கு கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment