TamilsGuide

உலகம் முழுவதும் செயலிழந்த ChatGPT

பிரபலமான ChatGPT சேவை உலகம் முழுவதும் செயலிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள பல பயனர்களால் ChatGPT சேவையை அணுக முடியவில்லை என வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஒரு தானியங்கி செய்தி தோன்றி பதில்களை உருவாக்குவதில் கோளாறு இருப்பதாகக் கூறுகிறது,

எனவே கோளாறு தொடர்ந்தால், தயவுசெய்து உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில் OpenAI அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிடவில்லை, எனபதுடன், தமது குழு இந்த சிக்கலை பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளது
 

Leave a comment

Comment