TamilsGuide

சவுதி அரேபியாவில் 14 நாடுகளுக்கான விசா நிறுத்தம்

மேற்காசிய நாடான சவுதி அரேபியா 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, வேலை விசா உட்பட சில விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

பங்களாதேஷ் , பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் உள்ளன.

கடந்த மாதமே தொடங்கிய இந்தக் கட்டுப்பாடு, இம்மாத இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

வேலை விசாவை தவிர, இ - விசா, குடும்ப உறுப்பினருக்கான வருகை விசா, சுற்றுலா விசா ஆகியவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.   

Leave a comment

Comment