TamilsGuide

சந்தானம் நடித்த DD Next Level படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியானது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம். இப்படத்தை ஆர்யாவின் தி ஷோ பீபல் நிறுவனம் தயாரித்தது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் சந்தானத்துடன் கீதிகா, செல்வராகவன், கவுதம் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் சந்தானம் ஒரு திரைப்படம் விமர்சகர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு அமானுஷ்ய சக்தி மூலம் ஒரு திரைப்படத்திற்குள் குடும்பத்துடன் சென்றுவிடுகிறார். அங்கு இருந்து எப்படி வெளி வருகிறார் என்பதே படத்தின் கதையாகும்.இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
 

Leave a comment

Comment