TamilsGuide

பேருவளை தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் காயம்

பேருவளையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பேருவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) உட்பட மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கொடிகளை ஏந்திய ஒரு குழுவினருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட குழுவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

பேருவளை துறைமுகத்திற்கு அருகில் லொரியில் பயணித்த ஒரு குழு கொடிகளைக் காட்டிக் கொண்டிருந்தபோது, ​​வீதியை தடை செய்ய வேண்டாம் என்று பொலிஸ் அதிகாரிகள் அவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

ஆரம்பத்தில் இரு பிரிவினருக்கும் இடையே ஒரு சுமுகமான பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது.

இது தீவிரமடைந்து இறுதியில் பொலிஸார் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்தது.

எவ்வாறெனினும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment