முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நாளைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மருந்து இறக்குமதி தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


