TamilsGuide

வட சென்னை பின்னணியில் உருவாகும் சிம்புவின் அடுத்த படம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின சிம்புவின் கதாப்பாத்திரம் பலரால் பாராட்டை பெற்று வருகிறது.

சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் வாடிவாசல் மற்றும் வட சென்னை 2 ஆகிய திரைப்படங்களை இயக்க வுள்ளார். இந்த கூட்டணியில் எம்மாதிரியான திரைப்படம் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
 

Leave a comment

Comment