TamilsGuide

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குகள் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 28 அட்டைப் பெட்டிகளில் மொத்தம் 7,600 சிகரெட் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்று (08) இரவு மேற்கொண்ட நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் எலபடகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
 

Leave a comment

Comment