TamilsGuide

அட்லீ - அல்லு அர்ஜுன் புதிய படத்தில் இணைந்த தீபிகா படுகோன்

ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. பெரும் பொருட் செலவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும். ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் தற்பொழுது இணைந்துள்ளார். இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அட்லீ தீபிகாவிற்கு கதை கூறுகிறார். மேலும் வேற்று கிரக வாசி கதாப்பாத்திரத்தில் தீபிகா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒரு ஆக்ஷன் கதாப்பாத்திரமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
 

Leave a comment

Comment