TamilsGuide

இந்த வார ஓடிடி ரிலீஸ்

ஓடிடியில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

'லால் சலாம்'

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளார். திரைப்படம் நேற்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது.

சிங்கிள்

இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்க ஸ்ரீ விஷ்னு கதாநாயகனாக நடித்துள்ளார். திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களுடன் கேடிகா ஷர்மா மற்றும் வென்னிலா கிஷோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு முக்கோண காதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. திரைப்படம் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமாகிறது.

'டூரிஸ்ட் பேமிலி'

சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள படம் "டூரிஸ்ட் பேமிலி" . இந்த படத்தினை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது. திரைப்படம் கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியானது.

'சின்னர்ஸ்'

இப்படத்தை ரியான் கூக்லர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மைக்கேல் பி. ஜோர்டான் இரட்டை வேடங்களில் இரட்டை சகோதரர்களாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஹெய்லி ஸ்டெய்ன்பீல்ட், மைல்ஸ் கேட்டன், ஜாக் ஓ'கானெல், டெல்ராய் லிண்டோ ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் கடந்த ஜூன் 03 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.

'ஜாத்'

கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடித்துள்ள படம் 'ஜாத்'. ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இதில் ரெஜினா கசன்ட்ரா, ரம்யா கிருஷ்ணன், ரன்தீப் ஹூடா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்டிரீமாகிறது.

'வடக்கன்'

கிஷோர் நடித்த வடக்கன் என்ற மலையாளத் திரைப்படம் சஜீத் ஏ இயக்கியுள்ளார். இது சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் நாடகமாகும், இதில் கிஷோர் மற்றும் ஸ்ருதி மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைப்பட்ம ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்டிரீமாகிறது.

'பிரிடேட்டர்: கில்லர் ஆப் கில்லர்ஸ்'

பிரிடேட்டர்: கில்லர் ஆஃப் கில்லர்ஸ் என்பது டான் டிராக்டன்பெர்க் மற்றும் ஜோசுவா வாஸங் ஆகியோரால் இயக்கப்பட்ட அனிமேஷன் படமாகும். அதிரடி திகில் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை 20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் மற்றும் டேவிஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது.
 

Leave a comment

Comment