TamilsGuide

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது

கசிப்பு உற்பத்தி செய்து விற்பனைக்காக கொண்டு சென்ற சகோதரர்கள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசுவமடு புன்னைநீராவி பகுதியில் இருந்து கசிப்பு உற்பத்தி செய்து புதுக்குடியிருப்பு இரட்டை வாய்க்கால் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றபோது அண்ணன், தம்பி ஆகிய இரு சகோதரர்களை புதுக்குடியிருப்பு பொலிசாரால் துரத்தி பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெறுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸாரினால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற இளைஞர்களை மறிக்க முற்பட்டபோது அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

தப்பி சென்ற இளைஞர்களை புதுக்குடியிருப்பு பொலிஸார் துரத்திச்சென்று முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வைத்து 110,000 மில்லிலீற்றர் பொதி செய்யப்பட்ட கசிப்புடன் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment