TamilsGuide

சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (06) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கைது சந்தேக நபரிடமிருந்து 1040 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment