பாகிஸ்தானில் வறுமைக்கோட்டுக்கு கீழ் 44.7 சதவீதம் மக்கள் வசிப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலக அளவில் உயர்ந்து வரும் விலையேற்றம் மற்றும் புதிதாக திரட்டியுள்ள தரவுகளின் படி வழமையான உலகளாவிய திருத்த பகுதியாக, உலக வங்கி அதன் சர்வதேச வறுமைக் கோடு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய சூழலில் பாகிஸ்தானின் வறுமை நிலைகளை தெளிவுப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும், பாகிஸ்தானியர்களின் வறுமை பாதிப்பைக் குறைப்பதற்கும், மீண்டு வருவதற்கான யோசனைகளின் முயற்சிகளும் தொடரும் என உலக வங்கியின் பாகிஸ்தான் நாட்டிற்கான பணிப்பாளர் நஜய்பென்ஹாசீன் தெரிவித்துள்ளார்.


