TamilsGuide

அதிகாரத்தைக் கைப்பற்ற சகல சபைகளிலும் தமிழரசுக் கட்சி போட்டியிடும் - அரசியல் குழு தீர்மானம்

நிர்வாகங்களைப் பகிர்ந்து கொள்வது சம்பந்தமாகச் சில கட்சிகளோடு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த மற்றைய சபைகள் அனைத்திலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மேயர், தவிசாளர் பதவிகளுக்கு வேட்பாளர்களை முன்மொழியும் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நேற்று இரவு 7.30 மணியில் இருந்து 9.30 மணி வரை இணைய வழியில் நடைபெற்றது.

இதன்போது உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டு மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது என்று தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment